Friday, November 12, 2010

நான் ஏழு வயசுலே..

இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
(இளநீ .....)

தேங்காயிலே பாலிருக்கும்
அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
இளசானா தண்ணி இருக்கும்
முத்திப் போனா என்ன இருக்கும்
உப்பு கரிக்கும்
மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
(நான் ஏழு வயசிலே ...)

இளனியிலே பலனிருக்கு
அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
இது தானே புது சரக்கு இங்கு
மத்தது எல்லாம் கடை சரக்கு
வெயில் நேரம் வேலை ஏறும்
வெலை ஏற சுவை ஏறும்
சூப்பி குடிச்சா
உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
இளநீ இளநீ இளநீ ...

தென்னை மரமும் பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
தென்னம் பாளையும் பொண்ண போல தான்
அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் செவக்கும்
(நான் ஏழு வயசிலே )

இளநீ இளநீ இளநீ

6 comments:

Anonymous said...

எதுக்கு இந்த பாட்டு..உங்களுக்கு பிடிச்சிருக்கா

பூங்குழலி said...

இந்த பாட்டு எனக்கும் பிடிக்கவில்லை தான் ...ஆனால் இது எம் ஜி ஆர் படப்பாடல் என்பதால் போட்டிருக்கிறேன் .ஓகேவா

kaviri said...

தேடிக் கொண்டிருந்த செல்வம் கிடைத்தது போல்.. தாங்க முடியவில்லை சந்தோஷம்!
மக்கள் திலகத்தின் மகத்தான் பாடல்களை ஒற்றைக்குடை நிழலில் .. எத்தனை அதிசயம்!
காவிரிமைந்தன் - kmaindhan@gmail.com

பூங்குழலி said...

நீங்கள் எழுதியிருப்பதை படித்தவுடன் எனக்கும் தாங்க முடியாத சந்தோசம் தான் ...மக்கள் திலகத்தின் பாடல்கள் என்றென்றும் அவர் போலவே மங்காத புகழுடன் இருக்கும் . உங்கள் பாராட்டுக்கு நன்றி .

saarvaakan said...

http://www.youtube.com/watch?v=OYDqNCQaulg&playnext=1&list=PL9252ACD635CCCE7A
அருமையான பாடல்
காணொளியில் கண்டு மகிழ்க!!!!!!!!!!!!

பூங்குழலி said...

நன்றி சார்வாகன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி