ஸ்ரீராமன் மீதிலே
பேராசை மீறியே
சீதை போல்
சூர்ப்பனகை உருமாறினாள்
நேராகவே
அந்த நிலை கண்ட ஜானகி
நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள
வந்த நீலி யாரோ
வஞ்சனையாலே
வலை வீசியே
(எந்தன் இன்பம் ..)
மனம் நாடும் மாறனை
மணமாலை சூடி
மகிழ்வுடன்
வாழ்வில் ஒன்றாய்
காதல் கீதம் பாடி
இன்பம் பறிபோனதால்
ஏங்கி வாடுறேனே
(எந்தன் இன்பம் ..)
தாலிக் கட்டிக் கொண்டவளை
தனிமையிலே தவிக்க விடும்
பாதகி நீ
பெண்ணா ?பேயா ?
சொந்தமாய் என் நாதனோடு
உறவாடல் ஏனோ
எந்தன் வாழ்வை நாசம் செய்து
இன்பம் காணத்தானோ
உண்மையான காதலின் உள்ளம் வேகலாமோ
(எந்தன் உள்ளம் )
http://www.youtube.com/watch?v=MI3Py4y8dgc
Wednesday, September 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மிகவும் அருமை
பூங்குழலி நல்லாயிருக்குது தங்கள் கவிதை. உங்க ஊரு வழியாக குற்றாலம் செல்லும் போது தங்கள் நினைவு வந்தது. நமது அன்புடன் நட்புகளை விசாரித்தாக கூறவும்
மிக்க நன்றி கண்ணன்
//பூங்குழலி நல்லாயிருக்குது தங்கள் கவிதை.//
திரைப்பட பாடல் இது .
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிச்சுமணி அவர்களே .
//உங்க ஊரு வழியாக குற்றாலம் செல்லும் போது தங்கள் நினைவு வந்தது//
குற்றாலம் சீசன் அப்போது போயிருந்தீர்களா ?ஆலடிப்பட்டி வழியாக சென்றீர்களா ?உங்கள் அன்பிற்கு நன்றி .
//நமது அன்புடன் நட்புகளை விசாரித்தாக கூறவும்//
அன்புடனில் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன் .
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி