Tuesday, November 2, 2010

இது நாட்டை காக்கும் கை

இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை
(இது நாட்டை ..)

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
(இது நாட்டை ..)

உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை
(இது நாட்டை... )

4 comments:

Ponchandar said...

ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பக்கம் வந்திருக்கேன் ! ! இன்னும் போடாத எம்.ஜி.ஆர் பாடல்கள் இருக்கா ????

பூங்குழலி said...

மீண்டும் நல்வரவு.....

என்ன இப்படி கேட்டுட்டீங்க?வெறும் ஐநூறு சொச்சம் பாடல்கள் தான் போட்டிருக்கேன்
:(
இன்னும் போடாத பாடல்கள் எக்கச்சக்கமா இருக்கு ...குறிப்பா ரொம்ப பழைய பாடல்கள் அப்புறம் அவரின் இறுதி படங்களில் சில ...

Anonymous said...

this song not in meenava nanban, from inru pol enrum vazha.

பூங்குழலி said...

நன்றி .திருத்தி விடுகிறேன் .

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி