கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே
எண்ணம் நிறைவதனால்
எழில்சேர் ஓவியம் நீ மதனா
(கண்ணின்...)
நல்ல உயிர் நீயே
துடிக்கும் நாடியும் நானே
பஞ்ச பாடல் நீரே என் மதனா
பாவை ரதியும் நானே
(கண்ணின் ...)
ஊனமில்லா நல்லழகே
ஊறுசுவையே கலாவதி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
(கண்ணின் ...)
ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே
ஜோடி கிளியென வாழ்வோமே
நாம் வாழ்வோமே
ஜோடி கிளியென வாழ்வோமே
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி