பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா -
உந்தன் பதமலர் நிதம் தேடி
பரவசமோடு பாடி கதி பெறவே
ஞானம் நீ தா தேவா
காதகனான ஒரு சோமுகன்
கை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்
பின்னர் மேதினி தான் மீள
பாதகன் தான் மாள
மீனவதாரம் செய்த திருமாலே
வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த
மந்தரகிரி தன்னை தாங்கிடவே -
ஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என
கோலமுற்றாய் புகழ் ஓங்கிடவே
ஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி
பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -
அவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே
நானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே
எங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற
ஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -
அந்த தூணில் இருப்பான் என்று
இயம்பியதால் நேர்ந்த தொல்லை
நீங்கவும் பொங்கு சினவம்பனர்கள்
பூத உடம்பும் தசை தின்ரெழுந்து
தோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே
நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே
ஷங்கு சக்ர தாரனே
உபகாரனே ஆதாரனே
மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே
க ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி
தந்தை ஆவியை பிரித்ததனால்
சூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே
தேவர்களை சிறை மீட்டு
ராவணாதி உயிர் மாய்த்த
தஷரத ஸ்ரீ ராம அவதாரனே
பூமி தனிலே புகழையும்
உழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா
கோபாலகிருஷ்ணனா ஆதிமூலா பரிபாலா
பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ரபேதகம் செய்த
அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரன்
சிங்காரன் தசாவதாரன் நீயே
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எம் .ஜி.ஆர் பாடல்களின் மிகச் சிறந்த ரசிகன் நான். நான் கேள்விப் பட்டிராத பாடல்
இது.. மகிழ்ச்சி . நன்றி
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி